சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இந்த சீரியலில் கடந்த சில எபிசோடுகளாக ஒரே ஒரு ரூமிற்காக பெரிய பிரச்சனையே நடக்கிறது.
மனோஜ் முத்துவை பார்த்து நீயே இந்த சொத்தை அனுபவிக்க பிளான் போட்றியா என கேட்க மனம் தாங்காமல் அவர் குடித்துவிட்டு கலாட்டா செய்ய சில விஷயங்களையும் பேசினார்.
படிச்ச முட்டாள் படிச்ச முட்டாள் என்ன பார்த்து எப்படிடா அப்படி சொன்ன என திட்டியிருப்பார். தற்போது படிச்ச முட்டாள் என்பதை மனோஜ் நிரூபித்துள்ளார்.
பரபரப்பு புரொமோ
வரும் ஞாயிறு அதாவது நாளை சிறகடிக்க ஆசை சீரியல் 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்காக வெளிவந்த புரொமோவில் மனோஜ் 4 லட்சம் ஏமாந்து போக விஜயாவிடம் உதவி கேட்கிறார்.
விஜயா அவருக்கு தர்மஅடி கொடுத்து மீனாவின் நகைகளை எடுத்து கொடுக்கிறார். மனோஜ் அதை அடகு வைப்பதற்கு பதிலாக விற்றுவிடுகிறார். இன்னொரு பக்கம் முத்து மீனா நகைகளை கொஞ்சம் கொடுங்கள் என தனது அப்பாவிடம் கேட்கிறார்.
இந்த பரபரப்பான புரொமோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.