நடிகை கௌசல்யா
90ஸ் கிட்ஸ் அனுபவித்த விஷயங்கள் போல 2k ஒன்றும் அனுபவிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இயற்கை, உணவு, விளையாட்டுகள், சினிமா இப்படி நிறைய விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். அப்படி 80கள் தமிழ் சினிமாவிற்கு அருமையான காலம் என்றால் 90 பொற்காலம் என்றே கூறலாம்.
90களில் தமிழ் சினிமாவிற்கு மிகவும் அழகான நடிகைகள் எல்லாம் கிடைத்தார்கள், அப்படி ஒரு நடிகை தான் கௌசல்யா.
லேட்டஸ்ட் க்ளிக்
1997ம் ஆண்டு நடிகர் முரளியுடன் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே நல்ல வரவேற்பு கொடுக்க நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, வானத்தை போல, குட்டி போன்ற படங்களில் நடித்தார்.
அப்போது அவ்வளவாக எந்த சினிமாவிலும் தலைகாட்டாத கௌசல்யா அண்மையில் நடிகை ராதா மகளின் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
அப்போது பிரபலங்களுடன் அவர் எடுத்த புகைப்படம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,