சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் 2010ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த தபாங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் ஜோக்கர், தாபங் 2, அகிரா, ஃபோர்ஸ் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.
திருமணம்
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் தற்போது Nikita Roy and The Book of Darkness மற்றும் கக்குடா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிற்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்த சூழலில் வருகிறார் ஜூன் 23ஆம் சோனாக்ஷி சின்ஹா – சாஹீர் இக்பால் ஜோடிக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.