அட்லீ
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியளவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் அட்லீ.
தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யுடன் மூன்று வெற்றி படங்களுக்கு பின் ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படத்தில் கைகோர்த்தார்.
[YOCFRO ]
இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அடுத்ததாக சல்மான் கானுடன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனராக மட்டுமின்றி அட்லீ தயாரிப்பாளராகவும் திரையுலகில் பயணித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பேபி ஜான். தமிழில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த பேபி ஜான்.
கேமியோ ரோல்
தனது தயாரிப்பிலேயே உருவாகியுள்ள இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம் அட்லீ. மேலும் பாலிவுட் சினிமாவில் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் காணும் இப்படத்தில் கேமியோ ரோலில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.