தொகுப்பாளினி பிரியங்கா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்காவின் தந்தை
பிரியங்கா தனது தந்தை குறித்து மிகவும் உருக்கமாக பேசி நாம் பார்த்திருக்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது தந்தையை பற்றி அவர் பேசிய விஷயங்கள் நம்மை கண்கலங்க வைத்தது.
இந்த நிலையில் மறைந்த தனது தந்தையின் பிறந்தநாள் என்பதால் அவருடன் தான் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் பிரியங்கா.
இதோ அந்த புகைப்படம்..