Sunday, March 16, 2025
Homeசினிமாஅம்பானி வீட்டு திருமணத்தில் தொலைந்த வைரம்.. சோகமான விஷயத்தை கூறிய பாடகி

அம்பானி வீட்டு திருமணத்தில் தொலைந்த வைரம்.. சோகமான விஷயத்தை கூறிய பாடகி


இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கக்கூடியவர் முகேஷ் அம்பானி.

இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா என்பவருடன் கடந்த வருடம் படு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை திருவிழா போல விதவிதமான இடங்களில் வெவ்வேறு ஸ்டைகளில் கொண்டாடப்பட்டது. இந்திய பிரபலங்களை தாண்டி ஹாலிவுட் பாடகர்கள் பலர் இவர்களது திருமண விழாவில் கலந்துகொண்டார்கள்.

இந்த திருமணத்தில் உலகத்திலேயே மிகவும் ஃபேமஸான ஃபேஷன் இன்ஃப்ளூயன்சரும், நடிகையுமான கிம் கர்தாஷியனும், அவருடைய அக்கா குளோயி கர்தாஷியனும் கலந்துகொண்டார்கள்.

தொலைந்த வைரம் 

இவர்கள் அம்பானி வீட்டு திருமணம் குறித்து பேசியிருந்தார்கள். அதில் அம்பானி யாரு என்று தெரியாது, ஆனால் எங்களுக்கு தெரிந்த ஒரு டிசைனர் மூலமாக தான் தெரிய வந்தது.

அம்பானி மகன் கல்யாணத்தில் கலந்துகொண்ட போது தான் போட்டிருந்த வைர நெக்லஸில் இருந்து ஒரு வைரம் கீழே விழுந்து தொலைந்துபோனதாக கிம் கர்தாஷியன் கூறி இருக்கிறார். அந்த வைரம் எங்கே போனது என தெரியவில்லையாம், அதை தேடியும் கிடைக்கவில்லையாம்.

பல லட்சம் மதிப்புள்ள வைரம் தொலைந்து போனது கஷ்டமாக இருப்பதாக கிம் கூறியிருக்கிறார். 

அம்பானி வீட்டு திருமணத்தில் தொலைந்த வைரம்.. சோகமான விஷயத்தை கூறிய பாடகி | Kim Kardarshan Lost Diamond In Ambani Wedding

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments