Tuesday, March 18, 2025
Homeசினிமாபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகர் மம்மூட்டி.. உண்மை என்ன..? இதோ பாருங்க

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகர் மம்மூட்டி.. உண்மை என்ன..? இதோ பாருங்க


மம்மூட்டி 

மெகா ஸ்டார் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பல தகவல்கள் இணையத்தில் உலா வந்த நிலையில், உண்மை என்ன என்பது குறித்து படக்குழு விளக்கம் கொடுத்துள்ளனர்.



மலையாள திரையுலகில் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் மம்மூட்டி. இவர் தமிழில் ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மறுமலர்ச்சி, தளபதி, பேரன்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

73 வயதாகியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து நடித்து வரும் மம்மூட்டி தற்போது, மகேஷ் நாராயணன் இயக்கி வரும் ‘MMMN’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்போது நடிகர் மம்மூட்டி பிரேக் எடுத்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகளை பரப்பிவிட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகர் மம்மூட்டி.. உண்மை என்ன..? இதோ பாருங்க | Mammootty Team Dismissed Cancer Rumors

இதில் “மம்மூட்டி ரமலான் நோம்பு இருப்பதால் விடுமுறையில் உள்ளார். இதனால், படப்பிடிப்பு இல்லை. இந்த பிரேக்கிற்கு பின் மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணையவுள்ளார்” என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments