அடுத்த சில ஆண்டுகளில் கண்டி நகரத்தை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுற்றுலா அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் மிக நீளமான கட்டிடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலை வளாகம் மறுசீரமைக்கப்பட உள்ளது.
அதேபோன்று ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் தொல்பொருள் துறை, நகர மேம்பாட்டு ஆணைக்குழு மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக கண்டி நகரம் முழுமையாக சுற்றுலா நகரமாக கட்டியெழுப்பப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.