Wednesday, March 19, 2025
Homeஇலங்கைஇலங்கையில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் – அதானி நிறுவனம் கலந்துரையாடல்

இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் – அதானி நிறுவனம் கலந்துரையாடல்


இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாக இந்தியாவின் “தி இந்து” செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் நிர்மானிக்கப்படவிருந்த புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்டத்திலிருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி நிறுவனம் சமீபத்தில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கியிருந்தது.

இருப்பினும், கேள்விக்குரிய திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கட்டணங்கள் குறித்து பரஸ்பர உடன்பாட்டை எட்டிய பின்னர், ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று “தி இந்து” செய்தித்தாள் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை அரசாங்கமும் சமீபத்தில் அதானி நிறுவனத்துடன் தொடர்புடைய திட்டம் தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடுவதாகக் கூறியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments