திரிஷா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.
[1XPVVG ]
திரிஷா – விஜய் கூட்டணியில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் நடந்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா பேசியுள்ளார்.
ஓப்பன் டாக்
“கில்லி படத்தில் லைட் அவுஸ் காட்சி எடுக்கும் போது இரவு 2,3 மணி இருக்கும். காலை 9 மணியில் இருந்து ஷூட்டிங் எடுத்திருந்தோம். நானும் விஜய்யும் தூக்க கலக்கத்தில் தான் நடித்தோம்.
இது ரொமான்ஸ் காட்சி, ரெண்டு பேரும் தூங்குறீங்க எப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று இயக்குனர் தரணி கேட்டார். கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தோம்” என நடிகை திரிஷா பேசியுள்ளார்.