கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரோமோ ஆகியவற்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இவை இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து எதிர்பார்ப்பு அதிகமாக்கியது. தற்போது கூலி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்தின் கூலி படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
யார் தெரியுமா?
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், விஜய்யின் பிகில் படத்தில் நடித்த ரேபா மொனிகா ஜான் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.