தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம சந்திப்புக்கு அருகிலுள்ள 25.5 மைல் தூணில் இன்று காலை மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் இரண்டு வான்கள், ஒரு கார் மற்றும் ஒரு லாரி ஆகியவை சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.