Wednesday, April 9, 2025
Homeசினிமாபீஸ்ட் திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட்.. செம மாஸாக இருக்கும் தளபதி விஜய், வீடியோ இதோ

பீஸ்ட் திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட்.. செம மாஸாக இருக்கும் தளபதி விஜய், வீடியோ இதோ


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இதுவே அவருடைய கடைசி படமாகும்.

இதன்பின் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீஸ்ட்

தளபதி விஜய் – இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால், வசூலில் பட்டையை கிளப்பியது. தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்ததாக ரஜினிகாந்தே ஜெயிலர் பட இசை வெளியிட்டு விழாவில் பேசியிருந்தார்.

பீஸ்ட் திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட்.. செம மாஸாக இருக்கும் தளபதி விஜய், வீடியோ இதோ | Thalapathy Vijay Beast Look Test Video

லுக் டெஸ்ட்

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் தளபதி விஜய் வீர ராகவன் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தனர். இந்த கதாபாத்திரத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோவை தான் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments