சூர்யா-ஜோதிகா
சாதாரணமாக பிரபலங்கள் திருமணம் என்றாலே ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள்.
ஆனால் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த ஜோடி நிஜத்தில் ஒன்றாக இணைகிறார்கள் என்றால் எப்படி இருக்கும். அப்படி தமிழ்நாட்டு ரசிகர்கள் இவர்கள் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜோடி தான் சூர்யா மற்றும் ஜோதிகா.
இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
சூர்யா நடிப்பில் அடுத்து கங்குவா படம் வெளியாக இருக்கிறது, ஜோதிகாவும் தமிழ், மலையாள, ஹிந்தி என பிஸியாக நடிக்கிறார்.
விஜயகாந்த்
கோலாகலமாக சூர்யா-ஜோதிகா திருமணம் நடக்க பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இந்த ஜோடியை வாழ்த்தினார்கள்.
ஆனால் நடிகர் விஜயகாந்த் மட்டும் திருமணத்திற்கு வரவில்லை, பத்திரிக்கை கொடுக்க வந்த சிவகுமாரிடமும் நான் வர மாட்டேன் என கூறியிருக்கிறார்.
நான் இப்போது தான் கட்சியை துவங்கி இருக்கிறேன், அதை விரிவுப்படுத்தும் பணியிலும் இறங்கி இருக்கிறேன், இது பலருக்கும் பிடிக்கவில்லை.
எப்போது கலகம் செய்யலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள், இதனால் சூர்யாவின் திருமணத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது, அதனால் தான் நான் திருமணத்திற்கு வர மறுக்கிறேன் என கூறியிருக்கிறார்.
பின் திருமணம் முடிந்த பிறகு மணமக்களை நேரில் சந்தித்து விஜயகாந்த் வாழ்த்தி இருக்கிறார்.