சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
நேற்றைய எபிசோடில் பாட்டியின் 80வது பிறந்தநாளுக்காக முத்து அவரது பள்ளி தோழிகளை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
அதனால் பாட்டி மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார், அதேபோல் மீனா பாட்டி கூறிய வாழ்க்கை தத்துவத்தை வீடியோ எடுத்ததை அனைவருக்கும் போட்டு காட்டி அவரும் எல்லோரின் மனதையும் வென்றார்.
அதோடு பாட்டி அவர் கொடுக்க இருந்த பரம்பரை நகையை முத்து-மீனா ஜோடிக்கு கொடுத்தார்.
நாளைய புரொமோ
மீனா, விஜயாவிடம் கொடுத்த நகைகள் போலி என்று நகைக்கடைகாரன் கூறியதை முத்து வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
விஜயா தனக்கு எதுவும் தெரியாதது போல் பழியை மீனா மீது போடுகிறார்.
நாளைய எபிசோட் புரொமோவில், முத்து (பலகுரல்) அதாவது ஸ்ருதியை வேறொரு குரலில் மனோஜிடம் நகைக்கடையில் இருந்து பேசுகிறோம் என போனில் கூற வைக்கிறார்.
இதில் மனோஜ் சிக்குவாரா அல்லது தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.