ரவீந்தர்
ரவீந்தர் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர்.
இவர் படங்கள் தயாரித்து பிரபலம் ஆனாரோ இல்லையோ சர்ச்சையான விஷயங்கள் குறித்து பேசுவது, அவரது திருமணம் போன்ற விஷயங்கள் மூலம் தான் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.
கடந்த 2022ம் ஆண்டு இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை மறுமணம் செய்து சந்தோஷமாக புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது இவர்கள் காதலித்து திருமணம் செய்தார்களா என்று தான் ஷாக் ஆனார்கள்.
உடல் எடையில் அதிகமாக இருக்கும் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்ததே பணத்திற்காக தான் என நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனால் அவர்கள் இருவருமே அதையெல்லாம் நினைக்காமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் பண மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்யப்பட்ட விஷயம் எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.
ரவீந்தர் பதிவு
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அன்பு என்பது கவனிப்பை பற்றியது மற்றும் ஒவ்வொரு விருப்பத்தில் இருந்தும் உண்மையான அன்பையும் அக்கறையும் நான் கண்டேன்.
இப்போது நான் உறுதி அளிக்கிறேன் மீதமுள்ள 364 நாட்களும் உங்களை கவனித்துக் கொள்வேன். நான் இன்று சிரிக்கவில்லை அதைவிட சந்தோஷமாக இருக்கிறேன், குடும்பத்தை நேசித்து வாழுங்கள் என அழகான பதிவு போட்டுள்ளார்.
அவரின் இந்த அழகான பதிவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.