சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் பாட்டியின் 80வது பிறந்தநாள் கோலாகலமாக நடந்து முடிந்தது.
பாட்டியை ஊருக்கு அனுப்பியும் வைத்துவிட்டார்கள். அதேவேகத்தில் வீட்டிற்கு வந்த முத்து நகை விஷயத்தை வீட்டில் பேசுகிறார்.
அண்ணாமலை விஷயம் கேட்டு கடும் ஷாக் ஆகிறார், ஆனால் விஜயா அப்படியே பழியை மீனா வீட்டின் மீதும், பாட்டி மீதும் போடுகிறார்.
இதனால் குடும்பமே கடும் ஷாக் ஆகிறது. மனோஜ் சிக்குவார் என்று பார்த்தால் சரியாக ஆதாரம் கிடைக்கவில்லை.
நாளைய புரொமோ
இந்த நிலையில் மனோஜ் மற்றும் விஜயா தான் நகை மாறியதற்கு காரணம் என்பதை தெளிவாக இருக்கும் முத்து அதை கண்டுபிடிக்க ஒரு விஷயம் செய்கிறார். அதாவது விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு சென்று நகை பற்றி பேசுகிறார்.
உடனே பார்வதி, அது கவரிங் நகை தானே என பட்டென கூறுகிறார், அவர் கூறியதை கேட்டு முத்துவிற்கான சந்தேகம் அதிகமாகிறது. முழுவதும் கேட்பதற்குள் விஜயா வீட்டிற்கு வந்து பார்வதியை கூப்பிடுகிறார்.
எப்படியும் அவரை விஜயா தடுத்திருப்பார் என தெரிகிறது. நகை விஷயம் இனி எப்படி செல்ல போகிறது, உண்மை வெளிவருமா என்பதை பொறுமையாக தெரிந்துகொள்வோம்.