Saturday, December 21, 2024
Homeசினிமாபணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்துகொண்டாரா?.. பதிலடி கொடுத்த சரத்குமார்!!

பணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்துகொண்டாரா?.. பதிலடி கொடுத்த சரத்குமார்!!


வரலட்சுமி

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


அண்மையில் இவர் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

வரலட்சுமி, நிக்கோலாயை காசுக்காக தான் திருமணம் செய்துகொண்டார், நிகோலய் ஆபத்தானவர் போன்ற நெகடிவ்  கருத்துக்களை சிலர் கூறி வந்தனர்.

அதுமட்டுமின்றி நிகோலய் -வின் உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து வந்தனர்.

பதிலடி 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமார், தனது மகள் திருமணத்தில் எழுந்த தவறான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.



அதில் அவர் பேசுகையில், நான் சமூக வலைத்தளங்களில் கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்கள்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும்.. இப்படி மறந்து இருந்து பேசுபவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது?

நான் மகளுக்காக மட்டும் பேசவில்லை எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன்.

உங்கள் மனதில் எழும் கற்பனையை வைத்துக்கொண்டு மற்றவர்களை கன்னாபின்னாவென பேசுவதற்கு உரிமை யார் கொடுத்தது?.

நான் எப்போதும் நெகடிவ் கமெண்ட் பார்க்க மாட்டேன். ஆனால் சிலர் இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வது மனதளவில் கஷ்டமாக இருக்கிறது.

என்னுடைய மகள் பணத்திற்காக திருமணம் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். அதற்கு நான் கவலை கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

வரலட்சுமி எதற்காக திருமணம் செய்துகொண்டார் என்பது அவருடைய முடிவு. அவர் நிக்கோலாயை மனதார பிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சிலர் தவறாக கமெண்ட் செய்துகொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.   

பணத்திற்காக வரலட்சுமி திருமணம் செய்துகொண்டாரா?.. பதிலடி கொடுத்த சரத்குமார்!! | Sarathkumar Reply Comments On Daughter Marriage

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments