சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக அழுத்தமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.
முத்து, மீனாவின் நகை எப்படி கவரிங்காக மாறியது என்பதை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என மும்முரமாக பல வேலைகளை செய்கிறார்.
எதர்சையாக அவர் போலீஸில் சிக்க மனோஜ் 3 லட்சம் ஏமாந்த விஷயம் தெரிய வந்தது, அதை வீட்டிலும் போட்டுக் காட்டினார். ஆனால் முழுவதுமாக மனோஜ் வீட்டில் சிக்கவில்லை.
நாளைய புரொமோ
இந்த நிலையில் நாளைய எபிசோடுக்கான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து வீட்டில் வைத்துள்ள எலுமிச்சை பழத்தில் இருந்து தப்பிக்க இன்னொரு சாமியாரை சென்று சந்திக்கிறார்கள் விஜயா மற்றும் மனோஜ்.
அந்த சாமியார் நீங்கள் எடுத்திருந்தால் கண்டிப்பாக அப்படி நடக்கும் என கூற இருவரும் ஷாக் ஆகிறார்கள்.
இதோ நாளைய புரொமோ,