டீன்ஸ்
கடந்த 12ஆம் தேதி பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் டீன்ஸ். இப்படத்தில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதிலும் குறிப்பாக அய்யன்காளி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் தீபன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவருடைய கதாபாத்திரம் படத்தில் மிகமுக்கியமான ஒன்றாக அமைந்தது.
கூலி படம்
இந்த நிலையில், அய்யன்காளி கதாபாத்திரத்தில் நடித்த தீபனுக்கு தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்திற்காக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தான் தீபன் நடிக்கிறாராம். டீன்ஸ் படத்தின் மூலம் நம்மை கவர்ந்த தீபன் கூலி படத்திலும் நம்மை கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.