நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர். வயதான பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர் சமீபகாலமாக அவ்வப்போது ஹீரோவாக படங்கள் நடிக்கிறார்.
கவுண்டமணி என்னதான் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் மீடியாவுக்கு பேட்டி கொடுப்பது மிக மிக குறைவு தான்.
இதுதான் காரணம்
இது பற்றி நடிகர் சத்யராஜ் ஒரு பதில் கூறி இருக்கிறார். கவுண்டமணியிடம் ஏன் பேட்டி கொடுப்பதில்லை என கேட்டால் “என் பேட்டி நாட்டுக்கு தேவை இல்லாதது. நீ கொடுக்குற காசுக்கு நான் திரையில் சிரிக்க வைக்கிறேனா.. அதை மட்டும் பாரு. சிரிச்சா சிரி.. இல்லனா போ.”
“அதை தாண்டி நீ என்னை பற்றி தெரிஞ்சிக்க ஒன்னும் இல்லை” என கூறுவாராம் கவுண்டமணி.