Thursday, December 26, 2024
Homeசினிமாசில்க் ஸ்மிதா இறந்த அன்று அப்படி நடந்திருக்க வேண்டும், ஆனால்?- பிரபல நடிகர் ஓபன் டாக்

சில்க் ஸ்மிதா இறந்த அன்று அப்படி நடந்திருக்க வேண்டும், ஆனால்?- பிரபல நடிகர் ஓபன் டாக்


சில்க் ஸ்மிதா

காந்த கண்ணழகி, வசீகர முகம், பேரழகி என ரசிகர்களால் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா.

ஆந்திராயில் பிறந்த இவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்து சினிமாவில் நுழைந்தார்.

சில்க் ஸ்மிதா கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பது அப்போதைய நிலையாக இருந்தது.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே அறிந்துகொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவிற்கு இருக்கிறது, இதனாலேயே தமிழை தாண்டி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.


நடிகரின் பதிவு


சில்க் ஸ்மிதா நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் வரும் போதெல்லாம் அவரை பற்றிய சில நினைவுகளை பிரபலங்கள் பகிர்வது வழக்கம். அப்படி நடிகர் ஆனந்தராஜ் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், எனக்கு சில்க் ஸ்மிதா நல்ல தோழியாக இருந்தார், Dirty Picture படத்தை பார்தேன், அதில் சில்க் பற்றி நிறைய விஷயங்கள் காட்டப்படவில்லை. அந்த படம் எடுக்கும் முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நான் இன்னும் சில விஷயங்களை கூறியிருப்பேன்.

சில்க் ஸ்மிதா இறந்த அன்று அப்படி நடந்திருக்க வேண்டும், ஆனால்?- பிரபல நடிகர் ஓபன் டாக் | Actor Anandraj Opens Up About Silk Smitha

சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஒரு கன்னட படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தேன்.

அந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருப்பதாக சொன்னார்கள், நான் உடனே சில்க் ஸ்மிதாவை ஆட வைக்கலாம் என்று பரிந்துரை செய்தேன், அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

அந்த பாடல் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த நாளில்தான் சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது.

அதைக்கேட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ந்து போய்விட்டோம், படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார். 

சில்க் ஸ்மிதா இறந்த அன்று அப்படி நடந்திருக்க வேண்டும், ஆனால்?- பிரபல நடிகர் ஓபன் டாக் | Actor Anandraj Opens Up About Silk Smitha

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments