கூலி
லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் இப்படத்திற்காக அவர் ரூ. 60 கோடி சம்பளம் வாங்குவதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து இருந்தார்.
கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவுள்ளது என்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் சம்பவம்
ஏற்கனவே இப்படத்தில் சத்யராஜ் கமிட்டாகியுள்ள நிலையில், பிரபல முன்னணி நடிகர் பகத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக பகத் பாசில் இணைந்து நடித்துள்ளார் என்பது, விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.