ராயன்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் வரை புகழ் பெற்றுள்ளார் நடிகர் தனுஷ். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ராயன். இது தனுஷின் 50வது படமாகும்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து வழக்கம் போல் அசத்தியிருந்தார்.
A சான்றிதழுடன் வெளிவந்த ராயன் படம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகும் என்ற கேள்வி இருந்த நிலையில், தற்போது அந்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளனர் மக்கள். ஆம், ராயன் படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்துள்ள ராயன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 73 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்ப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் ராயன் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 73 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், இது தனுஷின் சினிமா கெரியர் பெஸ்ட் திரைப்படம் என சொல்லப்படுகிறது.
இதன்மூலம் கேப்டன் மில்லர் படத்தின் மொத்த வசூலையும் இப்படம் மூன்றே நாட்களில் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video