தசாவதாரம்
உலகநாயகன் கமல் ஹாசன் திரை வாழ்க்கையில் முக்கியமான யாராலும் மறக்க முடியாத திரைப்படம் தசாவதாரம். இப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்தது.
இப்படத்தில் மொத்தம் 10 வேடங்களில் நடித்து நம் அனைவரையும் அசரவைத்தார் கமல். அதற்காக அவர் மேற்கொண்ட சிரமம்ங்கள் ஏறலாம். அதற்கான வீடியோவை கூட படக்குழு வெளியிட்டு இருந்தனர்.
கமலுடன் இணைந்து இப்படத்தில் அசின், நாகேஷ், மல்லிகா செராவத், கே.ஆர். விஜயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றிபெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 16 வருடங்களை கடந்துள்ளது.
வசூல்
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 106 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் இதுவே கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.