Net Worth
திரையுலகினரின் Net Worth நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அவர்களுடைய வருமானம் என்ன என்பது குறித்து ஊடகங்கள் மத்தியில் பேசப்படும்.
இந்த நிலையில், திரையுலக நட்சத்திரங்கள் போலவே தற்போது Youtube மூலம் பிரபலமடைத்தவர்களும் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளனர்.
விலேஜ் குக்கிங் சேனல்
அப்படி Youtube மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டவர்கள் தான் விலேஜ் குக்கிங் சேனல். YouTube தளத்தில் மிகவும் பிரபலமானவர்கள் விலேஜ் குக்கிங் சேனல்.
இவர்களுடைய சமையல் செய்யும் விதம் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
“கிடா கறி பிரியாணி, செமையா சமைக்கிறோம் பயங்கரமா ருசிக்கிறோம், இன்னிக்கி ஒருபுடி, எல்லாரும் வாங்க ஆல்வேஸ் வெல்கமஸ் யூ” என இவர்கள் சமைப்பதற்கு முன் பேசும் வசங்கங்கள் மக்களை அதிகளவில் கவர்ந்தது.
Youtube-ல் 25.4 மில்லியன் subscribers கொண்டுள்ள இவர்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் குறைந்தபட்சம் 15 மில்லியன் Views பெற்றுவிடுகிறது. அந்த அளவிற்கு டாப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், விலேஜ் குக்கிங் சேனலின் Net Worth குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடைய மொத்த Net Worth $ 2.8M முதல் $ 5M இருக்கும் என சொல்லப்படுகிறது.