விஜய் டிவியின் பொன்னி சீரியலில் ஹீரோயினாக வைஷு சுந்தர் மற்றும் ஹீரோவாக சபரிநாதன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
ஜெயலட்சுமி என்ற ரோலில் நடிகை ஷமிதா முதலில் நடித்து வந்தார். ஆனால் அவர் திடீரென கடந்த வருடம் நவம்பரில் விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு அந்த ரோலில் சிந்து நடிக்க தொடங்கி இருந்தார்.
மீண்டும் மாற்றம்
தற்போது நடிகை சிந்துவும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதனால் ஜெயலட்சுமி ரோலில் இன்னொரு நடிகை கமிட் ஆகி இருக்கிறார். நடிகை ரிஹானா தான் இனி ஜெயலட்சுமி ரோலில் நடிக்க இருக்கிறார்.
நடிகை சிந்து விஜயலக்ஷ்மிக்கு உடலநல குறைவு ஏற்பட்டதால் தான் சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.