ஆர். கே. செல்வமணி
தமிழ் சினிமாவில் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். கே. செல்வமணி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில், சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை எனும் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த நிலையில், இந்தியன் 2 படத்திலிருந்து சர்தார் 2 வரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகர்கள் பட புரமோஷன்களை தவிர்க்கக் கூடாது என்றும் படத்தில் நடிப்பது மட்டுமே நடிகர்களின் கடமை இல்லை என்றும் புரமோஷன் செய்து அந்தப் படத்தை ஓட வைப்பதும் நடிகர்களின் கடமைதான் என்றும் ஆர்.கே. செல்வமணி கூறியிருந்தார்.
[]
அதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் கொடுத்த நோட்டீஸ் அவர்களின் இயலாமையை தான் காட்டுகிறது என்றும், நடிகர் சங்கம் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என தனது கருத்தை ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
தொடர்ந்து, நடிகர் விஷால் சங்க பணத்தை எடுத்து கொடுத்ததில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் அது தர்மத்திற்கு எதிரான செயல் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் அசோக் செல்வன் பற்றியும் கூறியுள்ளார். அதில், அஜித், நயன்தாரான்னு இல்லை, யாராக இருந்தாலும் தங்கள் படத்தை புரமோட் செய்ய வேண்டும். அது அவர்களுடைய கடமை என்று ஆர்.கே. செல்வமணி அசோக் செல்வன் கண்டிப்பாக புரமோஷனுக்கு வந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.