நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடித்து இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்து வரும் நிலையில் விஜய் மில்டன் ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருந்தார்.
தனக்கு தெரியாமலேயே படத்தின் தொடக்கத்தில் ஒரு நிமிட காட்சியை இணைத்து இருக்கிறார்கள், படத்தில் ஹீரோ யார் என்பதை சஸ்பென்சாக வைத்து தான் கதை எழுதியதாகவும், அந்த உண்மையை அந்த ஒரு நிமிட வீடியோ ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டது எனபதால் படம் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்குமா என விஜய் மில்டன் கேட்டு இருந்தார்.
வீடியோ நீக்கம்
இந்நிலையில் அந்த ஒரு நிமிட வீடியோவை தயாரிப்பாளர் நீக்கி இருக்கிறார். விஜய் மில்டன் மற்றும் தயாரிப்பாளர் இடையே இருந்த பிரச்சனையை நடிகர் சரத்குமார் தான் பேசி சமரசம் செய்து வைத்து இருக்கிறார்.
அதனால் தான் மகிழ்ச்சி அடைந்ததாக விஜய் மில்டன் பேசி இருக்கும் புது வீடியோவை சரத்குமார் பகிர்ந்து இருக்கிறார்.
I like to thank milton and the producers for understanding each other and respecting the mediation for the good of the creation of the team in truly bringing out a new experience for the film goers and thank the audience for the support for the success of… pic.twitter.com/e6TfkiMb2w
— R Sarath Kumar (@realsarathkumar) August 3, 2024