ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த Mr. & Mrs. Mahi திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் உருவாகி வரும் தேவாரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
பிரமாண்ட வீடு
இதை தொடர்ந்து ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இளம் நடிகையான ஜான்வி கபூருக்கு மும்பையில் பாந்த்ரா பகுதியில் பிரமாண்டமான பங்களா ஒன்று இருக்கிறது. இதன் விலை மட்டுமே ரூ. 65 கோடி என தகவல்கள் கூறுகின்றனர்.