Wednesday, January 15, 2025
Homeசினிமாதெலுங்கில் ரீமேக் ஆகிறது பகத் பாசில் நடித்த ஆவேசம் படம்... நாயகன் யார் தெரியுமா?

தெலுங்கில் ரீமேக் ஆகிறது பகத் பாசில் நடித்த ஆவேசம் படம்… நாயகன் யார் தெரியுமா?


ஆவேசம்

சமீபகாலமாக மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் மலையாள சினிமாவின் மற்றொரு மாஸ்டர் பீஸாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வந்த திரைப்படம் ஆவேசம்.

மலையாள மொழியில் வெளியாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பகத் பாசிலின் அட்டகாசமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.


கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் அமோக வரவேற்பை பெற்று தந்தது. அத்துடன் பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்து சக்கை போடு போட்டது.

அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.

தெலுங்கு ரீமேக்


இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும், பாலகிருஷ்ணா ஆவேசம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தெலுங்கில் ரீமேக் ஆகிறது பகத் பாசில் நடித்த ஆவேசம் படம்... நாயகன் யார் தெரியுமா? | Fahadh Faasil Aavesham Telugu Remake

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments