Saturday, December 21, 2024
Homeசினிமாஅம்மாவிடம் சிக்கப்போகும் ஆனந்தி, மகேஷ் அம்மா செய்த சூழ்ச்சி... அன்புக்கு ரூட் கியர், சிங்கப்பெண்ணே இன்றைய...

அம்மாவிடம் சிக்கப்போகும் ஆனந்தி, மகேஷ் அம்மா செய்த சூழ்ச்சி… அன்புக்கு ரூட் கியர், சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்


சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே சன் தொலைக்காட்சியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.

இந்த சீரியல் ஆரம்பித்த நாள் முதல் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக கிராமத்தில் இருந்து சென்னை வரும் பெண் இங்கு இருக்கும் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், சுற்றி இருப்பவர்கள் என எல்லாவற்றையும் சமாளித்து அவர் எப்படி வாழ்கிறார் என்பதை சுற்றி கதை பயணிக்கிறது.

கடந்த சில எபிசோடுகளில் அழகன் என்பவரை கடிதத்தில் காதலித்து வந்த ஆனந்தி அதனால் பெரிய பிரச்சனையில் சிக்க இருந்தார். ஆனால் அதில் இருந்து எப்படியோ காப்பாற்றப்பட்டுவிட்டார்.


இன்றைய எபிசோட்


அழகன் பிரச்சனையால் சோகத்தில் இருக்கும் ஆனந்தியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவருடன் இருப்பவர்கள் முடிவு செய்து அவரது பெற்றோரை சென்னை அழைத்து வருகிறார்கள்.

இதனால் படு சந்தோஷத்தில் இருக்கிறார் ஆனந்தி. அவரது பெற்றோர்களை சென்னை சுற்றிகாட்ட மகேஷ் முடிவு செய்ய அவரது அம்மா சூழ்ச்சி செய்து அவரை தன்னுடன் இருக்க வைத்துவிடுகிறார்.

இதனால் அன்பு தனது ரூட் கியர் என சந்தோஷப்பட ஆனந்தியின் அழகன் விஷயம் குறித்து அவரது அம்மா தெரிந்துகொண்டது போல் புரொமோ அமைந்துள்ளது. என்ன நடக்கப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments