Friday, December 27, 2024
Homeசினிமாநடிகர் விக்ரமனை பார்த்து எமோஷனல் ஆனா முன்னணி நடிகர்.. வைரல் ஆகும் பதிவு இதோ!

நடிகர் விக்ரமனை பார்த்து எமோஷனல் ஆனா முன்னணி நடிகர்.. வைரல் ஆகும் பதிவு இதோ!


விக்ரம் 

நடிகர் விக்ரம் நடித்து பா. ரஞ்சித் இயக்கி வெளிவர இருக்கும் படம் தங்கலான். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி, ஹரி மற்றும் பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அப்போது கன்னடத்தில் நடந்த ப்ரோமோஷனில் நடிகர் விக்ரமனை, கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி சந்தித்துள்ளார்.

வைரல் ஆகும் பதிவு


இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி, விக்ரம் உடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார் அதில், ஒரு நடிகராக என் திரை வாழ்வில் விக்ரம் சார் எப்போதுமே எனக்கு உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். 24 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அவரை சந்தித்தது, என்னை ஒரு அதிர்ஷ்டசாலியாக உணரவைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விக்ரமனை பார்த்து எமோஷனல் ஆனா முன்னணி நடிகர்.. வைரல் ஆகும் பதிவு இதோ! | Rishab Shetty Emotionally About Vikram



மேலும், என்னைப் போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி எனவும், தங்கலான் வெற்றியடைய வாழ்த்துகள் எனவும். என் கனவு நிறைவேறியது, எனவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.



அதை தொடர்ந்து, ரிஷப் காந்தாரா : அத்தியாயம் 1 பட பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments