Wednesday, January 15, 2025
Homeசினிமாசினிமாவில் சேர இதுதான் காரணம்.. ரகசியத்தை கூறிய சமந்தா!

சினிமாவில் சேர இதுதான் காரணம்.. ரகசியத்தை கூறிய சமந்தா!


சமந்தா

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி. பின்பு, தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிலிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார் சமந்தா.



சமீபத்தில் மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். இதற்காக தீவிர சிகிச்சைகளை மேற்கொண்ட சமந்தா, அந்த நோயில் இருந்து மீண்டு வந்த பிறகு, புதிய படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சினிமாவில் சேர இதுதான் காரணம்


காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சமந்தா. அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர் நீங்கள் சினிமாவை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு. சமந்தா நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். அந்த காரணத்தால் என்னுடைய தந்தையால் என் மேல் படிப்பிற்காக பணம் செலுத்த முடியவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினார்.

சினிமாவில் சேர இதுதான் காரணம்.. ரகசியத்தை கூறிய சமந்தா! | Samantha Talk About Reason Entering In Cinema

அதன்பின், சினிமா எனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து விட்டது என்றும் கூறியுள்ளார். தற்போது, சமந்தா மலையாளத்தில் மம்மூட்டியுடன் ஒரு படத்திலும், ஷாருக்கானுடன் இந்தியில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், நடிகர் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் : ஹனி பன்னி என்ற தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments