சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.
பல வருட காலமாக இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்கள் ஏராளம், 1000 எபிசோடுகளுக்கு மேல் எல்லாம் வெற்றிகரமாக ஓடியது.
இந்த கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழைய சீரியல்கள் எல்லாம் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது கூட ரசிகர்கள் அந்த பழைய தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முடியும் தொடர்
தொடர்ந்து சில மாதங்களாகவே சன் டிவியில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத சீரியல்கள் எல்லாம் முடிவுக்கு வருகிறது. எதிர்நீச்சல் எல்லாம் உடனே முடியும் என்று ரசிகர்கள் நினைக்கவே இல்லை.
தற்போது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் வானத்தை போல தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் என்னது வானத்தை போல சீரியலா என அந்த சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.