விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் நடிகர் ஆரவ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு தெரியும்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோகள் வெளியாகின. அதில் அஜித் காரை வேகமாக ஓட்டி செல்ல, அவரது அருகில் ஆரவ் காயங்களுடன் கட்டப்பட்டு இருந்தார்.. கடைசியில் அந்த கார் நிலை தடுமாற ஒரு இடத்தில் கவிழ்ந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மீம் மெட்டீரியலாக மாறியது குறிப்பிடத்தக்கது.
போஸ்டர்
இந்நிலையில் இன்று ஆரவ்வின் பிறந்த நாள் முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதோ..
Presenting the look of actor @Aravoffl 🌟 from VIDAAMUYARCHI. 💥 Embracing the spirit of persistence! 💪#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl… pic.twitter.com/W5uP9gs5AB
— Suresh Chandra (@SureshChandraa) August 9, 2024