Sunday, December 22, 2024
Homeசினிமாஅவருடன் காதலில் இருக்கிறேனா? பிக் பாஸ் அர்ச்சனா கொடுத்த விளக்கம்

அவருடன் காதலில் இருக்கிறேனா? பிக் பாஸ் அர்ச்சனா கொடுத்த விளக்கம்


பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். அவர் அதற்கு பிறகு வேறு எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. டிமான்டி காலனி 2 படத்தில் ஒரு ரோலில் நடித்து அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

அவர் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக ட்ரிப் செல்வதாக ஆதாரத்துடன் போட்டோக்களும் வெளியாகி வருகின்றன.

அர்ச்சனா விளக்கம்

இந்நிலையில் அர்ச்சனா அளித்த ஒரு பேட்டியில் இது பற்றி கேட்டதற்கு, நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என கூறி இருக்கிறார்.

காதல் செய்திக்கு முற்றுப்புள்ளி என எடுத்துக்கொள்ளலாமா என தொகுப்பாளர் கேட்க, தயங்கியபடியே ‘அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்’ என கூறி இருக்கிறார். அவர் ‘காதல் இல்லை’ என உறுதியாக சொல்லாமல் மழுப்பலாக பேசி இருப்பதே அந்த கிசுகிசுவை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

அவருடன் காதலில் இருக்கிறேனா? பிக் பாஸ் அர்ச்சனா கொடுத்த விளக்கம் | Archana Ravichandran Clarifies On Love With Arun

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments