விஜய்
நடிகர் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், ட்ரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
GOAT படத்திற்கு விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 69. இதுவே அவருடைய கடைசி படம் ஆகும். இதற்குப்பின் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது ஹெச். வினோத் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளிவந்த நிலையிலும், இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
படப்பிடிப்பு அப்டேட்
மேலும் இப்படத்தில் சமந்தா, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
GOAT படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 69 குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் விஜய்யின் கடைசி படம் என்பதால் இது அரசியல் சம்மந்தமான கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.