ஷாருக்கான்
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளம் வருபவர் ஷாருக்கான். மேலும் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் ஆவார்.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
[DR207 ]
அது மட்டும் இல்லாமல் இந்தப்படங்கள் உலகளாவிய பார்வையாளர்களையும் கவர்ந்து
ரூ. 1000 கோடி மேல் வசூலை ஈட்டியது.
சமீபத்தில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் பார்டோ அல்லா கேரியரா என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது.
மேலும், அந்த விழாவில் இவர் நடித்த தேவதாஸ் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் அவர் ரசிகர்களுடன் உரையாடும் ஒரு பகுதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தன் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.
பாராட்டிய ஷாருக்கான்
அப்போது பேசிய அவர், பாலிவுட் சினிமாவிற்கும், தென்னிந்திய சினிமாவிற்கும் இடையே உள்ள தன் கருத்துகளை பற்றி நேர்மையாக கூறியுள்ளார். அதில், சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா உயர்ந்துள்ளது எனவும் பாராட்டி உள்ளார்.
மேலும், ஜவான், ஆர்ஆர்ஆர் மற்றும் பாகுபலி போன்ற சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்கள் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.