தங்கலான்
இன்று படு பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் தங்கலான்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படங்களுக்குமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும். கடைசியாக சார்பட்டா பரம்பரை படம் வெளியானது, அப்பட வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான்.
ரூ. 100 முதல் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா, பசுபதி, டேனியல், ப்ரீத்தி கரன், முத்துகுமார் என நிறைய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் இந்த கதை உருவாகியுள்ளது.
உலகமெங்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் தங்கலான் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
சம்பளம்
தங்கலான் படத்திற்காக கடின உழைப்பை போட்டுள்ள நடிகர் விக்ரம் இப்படத்திற்காக ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கலான் படம் வெற்றியடைந்தால் விக்ரம் சம்பளத்தை உயர்த்தி விடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.