80களில் தமிழ் சினிமாவில் களமிறங்கிய நடிகைகள் பலர் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
அப்படி ஒரு கோவிலே கட்டும் அளவிற்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை குஷ்பு.
1985ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜானோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதன்பின் தெலுங்கில் கலியுக பாண்டவலு படத்தில் நடித்தார்.
அடுத்து தமிழ் பக்கம் வந்தவர் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இதன்பிறகு நடிகை குஷ்புவின் சினிமா பயணம் எப்படி அமைந்தது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான்.
வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்னத்திரையிலும் கலக்கிய குஷ்பு அரசியலிலும் வலம் வருகிறார். அண்மையில் தான் வகித்துவந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பழைய போட்டோ
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு 38 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ மற்றும் தற்போதை புகைப்படத்தை பதிவிட்டு இந்த இரண்டு போட்டோவிற்கும் எந்த வித்தியாசம் என எழுதியுள்ளார்.
ரசிகர்களும் அவரவருக்கு தோன்றிய கமெண்ட் போட்டு வருகிறார்கள்.