பிரஷாந்த்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் பிரஷாந்த். இவர் நடிப்பில் 5 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் அந்தகன்.
இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
அந்தகன் திரைப்படம் வெளிவந்து பிரஷாந்த் மற்றும் சிம்ரன் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கு திரும்பினாலும் இப்படத்திற்கு மக்கள் இடையே பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
வசூல்
இந்த நிலையில் 6 நாட்களில் அந்தகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 5.2 கோடி வரை வசூல் செய்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது என கூறப்படுகிறது.