விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மகாராஜா.
இப்படத்தை இயக்குனர் நித்திலன் என்பவர் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலை செய்துள்ளது.
மகாராஜா படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருந்தார் விஜய் சேதுபதி. பல இடங்களில் பேட்டி கொடுத்து வந்த விஜய் சேதுபதி, அதில் ஒரு பேட்டியில் தனது மகனை அடித்தது குறித்து பேசியுள்ளார்.
ஓப்பன் டாக்
இதில் “அவர் எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களை நான் கூறியிருக்கிறேன். சில நேரங்களில் அவரை திட்டி இருக்கிறேன். சில சமயங்களில் அடித்து இருக்கிறேன். அடித்ததும் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஒரு குழந்தைக்கு தான் செய்வது தவறு என தெரியாமல் அந்த தவற செய்கிறது. ஆனால், அது செய்வது தவறு என்பதை தெரிந்து நாம் அடிப்பது நம்மீது தானே தவறு. ஆனாலும் அந்த நேரத்தில் வரும் கோபம் காரணமாக அடித்து விடுகிறோம். பின் நம் குழந்தைகளை அணைகிறோம்” என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவர் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சூர்யா எனும் மகனும், ஸ்ரீஜா எனும் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.