ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகைகள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார்.
எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர்.
வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்தவர் பாரதிராஜா கண்ணில் பட கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
சீரியலில் கலக்கிய ராதிகா இப்போது படங்களில் அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
ராதிகாவின் சொத்து
இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அவரின் முழு சொத்து மதிப்பு ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் ஒரு பிரம்மாண்ட வீடு வைத்துள்ள ராதிகா ரியல் எஸ்டேட் தொழில்களில் முதலீடு, தயாரிப்பு நிறுவனம் என சம்பாதிக்கும் இவர் அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.