தினேஷ்
தினேஷ் கோபால்சாமி, தமிழில் கடந்த 2010ம் ஆண்டு மஹான் என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பின்னர் புது கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் என பல தொடர்களில் நடித்து வந்தவர் விஜய்யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
இவர் தன்னுடன் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.
புதிய லுக்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மனைவியை பிரிந்த இவர் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார்.
தனது அம்மா, அப்பாவுடன் சென்று காரை வாங்கியவர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தனர். இந்த நிலையில் தினேஷ் திடீரென புதிய டெர்ரர் லுக்கிற்கு மாறியுள்ளார்.
மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட ரசிகர்கள் சூப்பர் லுக், டெர்ரராக உள்ளது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.