திரிஷா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் ஜோடி என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
பிறகு, தமிழில் கில்லி, மங்காத்தா, சாமி,போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர்.
இவருடைய அழகு மற்றும் நடிப்பு திறமை மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
இவரது நடிப்பில், விடாமுயற்சி, தக் லைஃப் போன்ற படங்கள் வரவிருக்கிறது. ஒருபக்கம் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த திரிஷா மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில், இவர் நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வில்லி ரோலில் திரிஷா
இந்த நிலையில், திரிஷா நடிக்க போகும் அடுத்த படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, திரிஷா அனிமல் படத்தின் இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து நடிக்கப்போவதாகவும், அந்த படத்தில் அவர் வில்லி ரோலில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த திரிஷாவின் ரசிகர்கள் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் அவர் நடிக்க வேண்டாம் என்றும், அது திரிஷாவின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய ரிஸ்க் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.