Friday, December 27, 2024
Homeசினிமாதிடீரென விஜய் வீட்டிற்கு வந்தது ஏன், என்ன விஷயம்.. ஓபனாக கூறிய பிரேமலதா விஜயகாந்த்

திடீரென விஜய் வீட்டிற்கு வந்தது ஏன், என்ன விஷயம்.. ஓபனாக கூறிய பிரேமலதா விஜயகாந்த்


நடிகர் விஜய்

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர்.

படத்துக்கு படம் மார்க்கெட், சம்பளம், ரசிகர்கள் கூட்டம் என உயர்ந்துகொண்டே வருகிறது. ஆனால் அவர் இந்த நேரத்தில் சினிமா போதும் நான் மக்களுக்காக உழைக்க முடிவு செய்துள்ளேன் என்று அரசியலில் கால் பதித்துள்ளார்.

முதலில் தனது கட்சி பெயர் அறிவித்தவர் இப்போது தனது கட்டிக் கொடியை அறிமுகம் செய்துள்ளார். ஆனால் கட்டிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நிறைய பிரச்சனைகள் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.


விஜயகாந்த்

விஜய் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்துள்ளார், படத்திற்கான டிரைலர் வரை ரிலீஸ் ஆனது. படத்தில் Ai தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் காட்சி இடம்பெற்றிருப்பது நம் அனைவருக்குமே தெரியும்.

சமீபத்தில் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குனர் வெங்கட் பிரபு 3 பேரும் விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து பிரேமலதா பேட்டியில், விஜய் எங்கள் வீட்டிற்கு வருவது புதியது அல்ல, அவர் பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார்.

எனது மகன் சண்முகப் பாண்டியன் நீங்கள் தான் எங்களுக்கு சினிமாவில் ரோல் மாடல் என விஜய்யிடம் கூற உடனே அவர் நீதான் எனக்கு அரசியலில் சீரியர் என்று சொன்னார். கோட் படத்தில் விஜயகாந்த் வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

படம் ரிலீஸ் ஆன பிறகு குடும்பத்தோடு வந்து படம் பார்க்க வேண்டும் எனவும் விஜயகாந்த் வரும் காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக வந்திருப்பதாக விஜய கூறியதாக பிரேமலதா கூறியுள்ளார். 

திடீரென விஜய் வீட்டிற்கு வந்தது ஏன், என்ன விஷயம்.. ஓபனாக கூறிய பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Opens Up About Vijay Meet Up



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments