சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேவரெட் சீரியல் என்று கொண்டாடப்படும் தொடர் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா இவர்களின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது வில்லி எப்போது சிக்குவார் என்று தான்.
அதாவது ரோஹினி தனது வாழ்க்கை குறித்து மொத்தமாக மறைத்து 2வது கல்யாணம் செய்துள்ளார்.
அவர் 2வது கர்ப்பமாக மருத்துவமனை செல்ல இன்றைய எபிசோடில் சீதா மற்றும் மீனா அவரை காண்கிறார்கள். அப்போது சீதா எதற்காக ரோஹினி மருத்துவமனை வந்துள்ளார் என விசாரிக்கும் போது 2வது கர்பத்திற்காக அவர் மருத்துவமனை வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனை கேட்டதும் மீனா அப்படியே ஆடிப்போகிறார், அதோடு இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என தனது தங்கையிடம் கூறிவிட்டு செல்கிறார்.
பரபரப்பு புரொமோ
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான புரொமோவில் சவாரி சென்றபோது ஒரு குழந்தை பிறந்த விஷயத்தை சந்தோஷமாக தனது குடும்பத்தினரிடம் கூறுகிறார் முத்து.
அதனை கேட்டதும் விஜயா செம கோபத்தில் ஊரில் எல்லோருக்கும் குழந்தை பிறக்கிறது.
ஆனால் இங்கு தான் ஒரு குழந்தையும் இல்லை என கோபப்படுகிறார்.