திருப்பாச்சி
கடந்த 2005ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் திருப்பாச்சி.
கில்லி என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த இப்படம் அவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
விஜய், த்ரிஷாவை தாண்டி பசுபதி, மனோஜ் கே ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
படத்தின் முக்கிய கதை அண்ணன் தங்கை சென்டிமென்ட் தான்.
நடிகை மல்லிகா
இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மல்லிகா. சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
கடைசியாக சரத்குமார், சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை மல்லிகா தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த புகைப்படத்தில் அவர் கொஞ்சம் குண்டாக ஆளே மாறி காணப்படுகிறார்.