சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடர் வெளிவரவுள்ளது. இந்த வெப் தொடருக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சிட்டாடல் வெப் தொடரில் ஆக்ஷன் நாயகியாக சமந்தா கலக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெப் தொடரை தொடர்ந்து படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறாராம்.
தளபதி விஜய்யின் கடைசி படம் தளபதி 69ல் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
புதிய லுக்
நடிகை சமந்தா நடக்கவிருக்கும் Pickleball Leagueல் சென்னை அணியின் உரிமையாளராகியுள்ளார். அப்போது அவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
நம்ம சமந்தாவா இது என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அந்த அளவிற்கு ஆளே மாறி டோட்டலாக புதிய லுக்கில் தோற்றமளித்து இருந்தார் நடிகை சமந்தா.
இதோ அந்த வீடியோவை பாருங்க..
Samantha New Look…🥵pic.twitter.com/z2qJ3ptRp3
— 𝙆𝘿 ★ (@krishbliz) August 24, 2024